மூன்றாம் பாலினம்
ஆண்டவன் படைப்பில்
நிகழ்ந்த ஓர் அற்புதப் பிழை.!
நிகழ்ந்த ஓர் அற்புதப் பிழை.!
ஆணா, பெண்ணா என அறியமுடியாத,
மனித இனத்தின்
ஓர் இலக்கணப் பிழை !
ஓர் இலக்கணப் பிழை !
வயிற்றுப்பிழைப்புக்கே
பிச்சையெடுக்க வைத்த,
பிச்சையெடுக்க வைத்த,
மனித வர்க்க்கத்தின்
தொடக்கப்பிழை!
தொடக்கப்பிழை!
பெற்றவளே புறந்தள்ளிய
ஓர் துரோகப் பிழை!
ஓர் துரோகப் பிழை!
மானத்தை உயிராய் மதிக்கும்
மானமுள்ளவர்களின் மத்தியில்,
மானமுள்ளவர்களின் மத்தியில்,
மானம் காக்க போராடும்
மானுடவர்கத்தின் மானப்பிழை!
மானுடவர்கத்தின் மானப்பிழை!
மருத்துவத்தின் மகத்துவத்திற்கு
சவால் விடுக்கும் சாதாரணப் பிழை!
சவால் விடுக்கும் சாதாரணப் பிழை!
மனிதம் காப்போம் எனக்கூறும்
மானுடத்தின் சில பேருக்கு மட்டுமே புரியும்
இந்த பாலினப் பிழை!!!
மானுடத்தின் சில பேருக்கு மட்டுமே புரியும்
இந்த பாலினப் பிழை!!!
No comments:
Post a Comment